நமோ நாராயண அடியேன் பூர்வாசிரமம் பெயர் வீர ராகவன். அடியேன் சுமார் நாற்பது வருடமாக இந்த ஆன்மீக வாழ்க்கையில் பல கைங்கர்யங்கள் செய்து நிறைய ஆலயங்கள் திருப்பணி மற்றும் ஏழைகளுக்கு நிறைய கைங்கரியங்கள் செய்து குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் முதியவர்களுக்கான உதவிகள் எங்களால் முடிந்த அளவில் அன்னதானம் அனைத்தும் நாங்கள் செய்து வருகின்றோம். சுமார் நாற்பது வருட வாழ்க்கையில் அடியேன் பிறந்து வளர்ந்தது அனைத்தும் ஆலங்குடியில் அங்கிருந்து ஆன்மிக பயணத்தை சிறிய வயதில் எனது இல்லற கடமையை முடித்து எனது ஆன்மிக பயணத்தை அடியெடுத்து வைத்து இன்று வரை பயணம் செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படி உள்ள காலகட்டங்களில் 2004 இல் ஸ்வாமிகள் ஆஞ்சநேயர் அனுக்கிரகம் ஆஞ்சநேயர் உபாசகம் 48 நாள் மௌன விரதம் இருந்து பனிரெண்டு பௌர்ணமிக்கு மௌன விரதம் இருந்து இந்த ஆஞ்சநேயர் உபாசகம் இயற்கையாகவே சுயம்புவாகவே அவதாரம் எடுத்து அடியேன் இந்த பணியை செய்து வருகின்றேன். அப்போது ஆஞ்சிநேயரிடம் ஒரு கோரிக்கை நாம் நமக்கென்று ஒரு இடம் வேண்டும் அதற்காக சுவாமியிடம் வேண்டிக்கொண்டோம். அப்போது இந்த சிவராமபுரம் ஸ்தலத்தை ஆஞ்சநேயர் உணர்த்தி இந்த இடத்தை இந்த பூமியை வாங்குவதற்கு உத்தரவு இட்டு இருந்தார். அதன் அடிப்படையில் இந்த இடத்தை உதவியாக பெற்று இங்கு இந்த பணிகளை செய்து வருகின்றோம். அதன் பின் இப்போது ஐந்து வருட காலமாக மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள் அனுகிரத்தாலும் அகில பாரத சந்நியாசிகள் சங்க கோரிக்கையாலும் அடியேன் ஜீயர் ஆக ராமானுஜருக்கு பக்தனாக ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள் அனுக்கிரகத்தால் அடியேனுக்கு இந்த ஜீயர் ஸ்வாமிகள் பட்டம் பெற்று இன்று சுமார் ஐந்து வருட காலமாக இந்த பணியை செய்து வருகின்றோம்.
நிறைய கிராமங்கள் தோறும் திருப்பணிகள் செய்து வருகின்றோம். நம்மால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகின்றோம் கிராமங்கள் தோறும் ஆலயப்பணிகள் செய்து திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் செய்துவருகின்றோம். இந்த சிவராமபுரம் ஷேத்திரம் மிகப்பெரிய பேரும் புகழும் பெற்று இந்த ஆலயத்தில் வந்தால் நிச்சயம் கிடைக்கும். இந்த ஆலயத்தில் சீரடி சாய்பாபாவிற்காக 2009 ஆலயம் நிறுவப்பெற்று சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்பின் ஒவ்வொரு ஆலயமாக இந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் நூற்றி ஐந்து அடி உயரம். இராமலிங்க ஸ்வாமிகள் மகா கணபதி ஆறடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அனைத்தும் சேவித்து நமது இந்த சிவராமபுரம் ஷேத்திரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தில் இங்கு ஒரு சிவாலயம் அதாவது சிவனும் ராமரும் சேர்ந்து அனுகிரகம் செய்வது போல் சிவனின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்ததாக விஸ்வரூப ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயர் இராமலிங்க ஸ்வாமிகள் பைரவ சித்தர் அவர்களுக்கும் சீரடி சாய்பாபா ஆலயத்திற்கும் சிறப்பான முறையில் திருப்பணிகள் நடைபெற இருக்கின்றன. மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. இந்த ஆலயங்களை முதலில் சம்ப்ரோக்ஷணம் செய்துவிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு முன் சீதா லட்சுமி சமேத ராமநாத சுவாமி ஆலயமும் அமைய இருக்கின்றது.
இந்த சிவராமபுர ஷேத்திரத்தில் இங்கு வந்து என்ன வேண்டுமானாலும் எந்த கோரிக்கையை வைத்தாலும் இறைவனுடைய அனுகிரகத்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர் அனுகிரகத்தால் அனைத்து கைங்கர்யங்கள் பிரார்த்தனைகளை உடனே நடத்திக் கொடுக்கின்றார்கள்.
ஆலய நடை திறப்பு நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெறும் பாபாவிற்கு காலை ஐந்து மணிக்கு ஆரத்தி மதியம் மதியம் 12 மணிக்கு ஆரத்தி மாலை 6 மணிக்கு ஆரத்தி இரவு 7:30 மணியளவில் ஆரத்தி இரவு எட்டு மணி அளவில் நடை சாத்தப்படும்.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகின்றன. அமாவாசை சிறப்பு யாகமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தங்கள் விருப்பம் போல உங்கள் கைகளால் பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்படும்.
இங்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை அமாவாசை சிறப்பு பூஜை சனிக்கிழமை சிறப்பு பூஜை பௌர்ணமி சிறப்பு பூஜை பௌர்ணமி அமாவாசையில் யாகமும் நடைபெற்று வருகின்றது. அதற்குண்டான சங்கல்பங்கள் சேவிக்கப்பட்டு அவர்கள் கைகளால் பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகின்றது. வியாழக்கிழமை தோறும் அன்னதானங்களும் சிறப்பான முறைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சீரடி பாபாவிற்கு அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்வதற்க்கு கட்டணமாக மூவாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். யாகத்தில் கலந்து கொள்ள ரூபாய் இருநூற்றி ஐம்பது செலுத்த வேண்டும். அவர்கள் தாங்களே நேரில் கலந்து கொண்டு அவர்களுடைய பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி பிரசாதத்தை பெற்று கொள்ளலாம். நேரில் வரமுடியாதவர்களுக்கு அவர்களுடைய முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். அன்னதானத்திற்கு தங்களால் இயன்ற பொருள் உதவி அளிக்கலாம். சிறப்பானமுறையில் இந்த திருப்பணிகள் நடைபெறுவதற்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஷிர்டி சாய்பாபா அணைத்து கோவில்களுக்கும் திருப்பணி சேவிக்க இருக்கின்றன. தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து இந்த ஆலயத்தை சிறப்பாக நடத்தி கொடுக்கும் படியும், பர்வதமர்தினி சமேத இராமலிங்க ஸ்வாமிகள் ஆலயம் சிறப்புடன் நடைபெற பக்த கோடிகள் தங்களால் இயன்ற உதவிகளை UPI மூலமாகவோ வங்கி கணக்கு மூலமாகவோ அனுப்பும்படி கேட்டு கொள்கின்றோம்.
ஆலய நடை திறப்பு நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெறும் பாபாவிற்கு காலை ஐந்து மணிக்கு ஆரத்தி மதியம் மதியம் 12 மணிக்கு ஆரத்தி மாலை 6 மணிக்கு ஆரத்தி இரவு 7:30 மணியளவில் ஆரத்தி இரவு எட்டு மணி அளவில் நடை சாத்தப்படும். பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகின்றன. அமாவாசை சிறப்பு யாகமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தங்கள் விருப்பம் போல உங்கள் கைகளால் பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்படும்.
+91 98944 31665
ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய சேவா டிரஸ்ட். திருமடம், நிறுவனர் : ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஜதாச ஜீயர், சிவராமபுரம் 609810, திருவாலங்காடு (P.O), குத்தாலம் தாலுகா, மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு.
srisripanchamugatrust@gmail.com